வெளிநாடுகளில் வருடந்தோறும் 300 இலங்கையர்கள் மரணம்!!

619

Deadவெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக சென்றுள்ள இலங்கையர்களில் வருடந்தோறும் 300 பேர் வரை உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமாக மேற்கு ஆசிய நாடுகளிலேயே அதிகமானவர்கள் உயிரிழப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இதில் 69 வீதமானோர் இயற்கையான மரணமாகின்றனர். 27 வீதமானோர் விபத்துக்களில் மரணமாகின்றனர். ஏனையோர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இலங்கையில் இருந்து சுமார் 15 லட்சம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.இதில் பெரும்பாலானோர் பெண்களாவர்.

2011 ஆம் ஆண்டு மாத்திரம் இலங்கையர்களின் மரணம் 289 என்று அறிவிக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டில் அது 303 ஆக உயர்ந்தது.

அரேபிய தகவல்களின் படி இலங்கை பெண்களை அதிகமாக மரணமாவதாக கூறப்படுகின்ற போதும், ஆண்களே அதிகமாக மரணமாவதாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.