வவுனியா நகரசபை உறுப்பினருக்கு கொரோனா தொற்று!!

1082


கொரோனா..


தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா நகரசபை உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.வவுனியா நகரசபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் உறுப்பினர் ச.தனுஸ்காந்தின் மனைவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொண்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தினருக்கு இன்று (22.11) மேற்கொண்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் நகரசபை உறுப்பினருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


அவர் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்த சுகாதாரப் பபிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.