வவுனியாவில் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

1509


கடும் மழை..


வவுனியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக வடக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் நேற்று மாலையில் இருந்து வவுனியாவில் மழை பெய்து வருவதுடன் இன்று அதிகாலை முதல் கடும் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.


நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் 61.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவதானிப்பாளர் தா . சதானந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையிலும் பார்க்க அதிக மழை வீழ்ச்சி இன்றையதினம் பதிவாகியுள்ளது. இக்காலநிலை மாற்றம் இன்னும் சில தினங்கள் நீடிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிக மழை காரணமக தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர் காணப்படுவதுடன், வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைவடைந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாடசாலைகளுக்கு மாணவர் வரவும் மிகவும் குறைவாக அமைந்துள்ளதாக எமது பிராந்தி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.