வவுனியாவில் கடும் மழை காரணமாக 9 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் பாதிப்பு!!

1634


கடும் மழை..


வவுனியாவில் பெய்து வரும் கடும் மழை கராணமாக 9 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.வவுனியாவில் கடந்த மூன்று தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து பல குளங்கள் வான் பாய்ந்து வருவதுடன், தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.


அதனடிப்படையில் குளம் ஒன்று வான் பாய்வதன் காரணமாக வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்குண்ணாமடு கிராமத்தில் வெள்ள நீர் காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பாதிப்படைந்துள்ளனர்.


அத்துடன், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நேரியகுளம் கிராம அலுவலர் பிரிலில் உள்ள இலுப்பைக்குளம் வான் பாய்வதன் காரணமாக 8 குடும்பங்களைச் சேர்ந்த 35 குடும்பங்கள் பதிப்படைந்துள்ளதுடன்,

அப் பகுதியின் போக்குவரத்து பாதைகளும் வெள்ள நீரில் முழ்கியுள்ளன. மேலும் பூந்தோட்டம் ஸ்ரீநகர் பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் பாதிப்படைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக மக்களது இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன், பாடசாலைகளுக்கு மாணவர் வருகையும் குறைவாக காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.