வவுனியா – கொழும்பு பஸ்ஸில் மோதி ஒருவர் பலி!!

470

accident-logo1புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸில் பாதசாரி ஒருவர் மோதுண்டதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தின்போது படுகாயமடைந்த பாதசாரி நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 40 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை இந்நபர் தபுத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.