வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளக இடமாற்றத்தில் முறைகேடு!!

1628

உள்ளக இடமாற்றத்தில் முறைகேடு..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர்களின் உள்ளக இடமாற்றத்தில் முறைகேடு காணப்படுவதாக வைத்தியசாலை அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினர் குற்றச்சாட்டினை முன்வைத்து உரிய அதிகாரிகளுக்கு மகஞர் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர். குறித்த மகஞரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வவனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தாதிய உத்தியோகத்தர்களுக்கு உள்ளக இடமாற்றம் வழங்கப்பட்டிருந்து.

மேற்படி இடமாற்றம் தொடர்பில் தாதிய சங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த முறையற்ற விடுதி சுழற்சி தொடர்பான முறையீட்டுக்கு அமைவாக வைத்தியசாலை பணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் விடுதி சுழற்சிக்காக ஒரு குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

அக்குழுவில் பிரதி பணிப்பாளர், பிரதம தாதிய பரிபாலகர், தாதியபரிபாலகர் விடுதி சகோதரி மற்றும் நிர்வாக அதிகாரி போன்றோர் உள்ளடக்கப்பட்டு விடுதி சுழற்சியானது சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்டு,

அறிவிப்புபலகையில் காட்சிப்படுத்தப்பட்ட பின்னரே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மேற்படி மேற்கொள்ளப்பட்ட விடுதி சுழற்சி உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

அவ்வாறு இருப்பினும் இன்னும் சில தாதியர்கள் முன்னறிவிப்பின்றி தாதிய பரிபாலகரினால் விடுதி சுழற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இம்முறையற்ற செயலை கண்டித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். என குறிப்படப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கை அடங்கிய மகஞர்கள் வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனை செயலாளர் மற்றும் பணிப்பாளர் மற்றும் பல உயர் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.