புதிய சாதனையுடன் T20 போட்டிகளில் இருந்து விடைபெறுகிறார் மஹேல ஜயவர்தன!!

512

S5

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை இலங்கை அணி வீரர் மஹேல ஜயவர்தன பெற்றுள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது உலக கிண்ண இறுதிப் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இச் சாதனையுடன் 20-20 போட்டிகளில் இருந்து மஹேல ஜயவர்தன விடைபெறுகின்றார்.

55 T20 போட்டிகளில் விளையாடியுள்ள மஹேல ஜயவர்தன 1493 ஓட்டங்களை 31.76 என்ற சராசரியில் பெற்றுள்ளார். இதில் 1 சதமும் 9 அரைச் சதங்களும் அடங்கும்.