உலகத்தையே பீதியில் உறைய வைத்திருக்கும் ஒமிக்ரோன் : இலங்கையில் மற்றுமொரு முடக்கம் ஏற்படுமா?

1881

ஒமிக்ரோன்..

ஒமிக்ரோன் வைரஸ் திரிபின் தீவிரத்தை பொதுமக்கள் உணர்ந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஏ.முணசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் கோவிட் திரிபு இலங்கையிலும் பரவுவதனை தடுக்க நாட்டை முடக்குவது தீர்வாக அமையாது. இந்த வைரஸ் திரிபின் தீவிரத்தை பொதுமக்கள் உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக எதிர்வரும் பண்டிகை காலங்களில் இந்த நிலைமை தொடர்பில் மிக அவதானம் கொள்ள வேண்டும் என அவர் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.