வவுனியா செட்டிகுளம் படுகொலையின் 37 ஆவது நினைவு நாள்!!

1403

செட்டிகுளம் படுகொலை..

வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தில் 52 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் மரணித்தவர்களின் உறவுகளினால் அவர்களது வீடுகளிலேயே நினைவு கூறப்பட்டப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பொலிசாரால் அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில் இறந்த அம் மக்களை நினைவுகூற வன்னியைச் சேர்ந்த எந்த அரசியல் தலைமைகளும் முன்வராத நிலையில் உறவுகளை இழந்தவர்கள் தத்தமது வீடுகளில் மரணித்த தமது உறவுகளுக்கு தீபமேற்றி நினைவு கூர்ந்தனர்.

கடந்த 1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 2 ஆம் திகதி செட்டிகுளம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு நேரம் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட 52 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.