இடைநிறுத்தப்பட்ட எரிவாயு விநியோகம் : வெளியானது புதிய அறிவிப்பு!!

1658

எரிவாயு விநியோகம்..

மறு அறிவித்தல் வரும் வரை எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனை ஆகியன இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எரிவாயுவின் தரம் தொடர்பான தெளிவான உத்தரவாதம் கிடைக்கும் வரை குறித்த முடிவு நடைமுறைப்படுத்தப்படும் என குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், தமது எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.வேகப்பிட்டிய கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.