மட்டக்களப்பில் பெண் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி பலி!!

421

Murderமட்டக்களப்பு இருதயபுரம் பிரதேசத்தில் பெண் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். வீட்டில் கத்தி குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண், மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற வழியில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார். 46 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பெண்ணின் மகளின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளத் தொடர்பு ஒன்றுக்கு குறித்த பெண் ஒத்துழைப்பு வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பெண்ணை மீது குறித்த நபர் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.