இலங்கையிடம் தோற்றது ஏன் : டோனி விளக்கம்!!

446

Dhoni

இந்தியாவை வீழ்த்தி 20 ஓவர் உலக கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியது. முதலில் விளையாடிய இந்திய அணியால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. வீராட் கோலி 58 பந்தில் 77 ஓட்டங்களை எடுத்தார். ஹேரத், குலசேகர, மத்யூஸ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று உலக கிண்ணத்தை கைப்பற்றியது.

சங்ககார 35 பந்தில் 6 நான்கு ஓட்டங்கள், ஒரு ஆறு ஓட்டங்களுடன் 52 ஓட்டங்களை எடுத்தார். அவரே ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார். 6 போட்டிகளில் 319 ஓட்டங்களை குவித்த வீராட் கோலி தொடர் நாயகன் விருதை பெற்றார்.

கடைசி 4 ஓவர்களில் இந்திய அணியின் துடுப்பாட்டம் மிகவும் மோசமாக இருந்தது. 16 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்களை எடுத்தது. ஆனால் அடுத்த 4 ஓவர்களில் வெறும் 19 ஓட்டங்களே எடுக்கப்பட்டது.

ஒரு பந்து கூட எல்லைக்கோட்டுக்கு வெளியே அடிக்கப்படவில்லை. இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது. தலைவர் டோனியும் அதை ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது..

கடைசி 4 ஓவரில் எங்களது துடுப்பாட்டம் மிகவும் மோசமாக இருந்தது. கடைசி 4 ஓவரில் தான் ஓட்டங்களை குவிக்க முடியும். ஆனால் அதை செய்ய தவறிவிட்டோம். இது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஆனால் அதே நேரத்தில் இலங்கையின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. அவர்கள் விக்கட்டுக்கு வெளியே மிக அருமையாக யோக்கர் பந்தை போட்டனர். அனைத்து பந்துகளையும் சிறப்பாக வீசினர்.

மோசமான ஆட்டம் காரணமாக வீரர்கள் மீது ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். எந்த ஒரு வீரரும் மோசமாக விளையாட வேண்டும் என்று உண்மையில் நினைப்பது இல்லை.

யுவராஜ்சிங் சிறப்பாக விளையாட முயன்றார். ஆனால் அது சரியாக அமையாமல் போனது என்று டோனி கூறியுள்ளார்.