வவுனியாவில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்து : ஒருவர் படுகாயம்!!

2804

விபத்து..

வவுனியா குட்சைட் வீதியில் இன்று (14.12.2021) காலை 9.45 மணியளவில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குட்செட் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி முச்சக்கரவண்டி பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் கருமாரி அம்மன் ஆலயத்தினை அண்மித்த நேரத்தில் எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் இரு வாகனங்களும் பலத்த சேதங்களுக்குள்ளாகியதுடன் மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.