வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் மூன்று மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று சாதனை!!

451

V3

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் மூன்று மாணவர்கள் 9A சித்தியினைப் பெற்றுள்ளனர்.

டிலக்க்ஷனா தர்மராஜா, ரட்சனா ஜோன்சன், மதிஜெனனி பாலசிங்கம் ஆகிய மூவருமே 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பாடசாலையின் அதிபர் செல்வி உமா இராசையா இது குறித்து வவுனியா நெற் இணையத்திற்கு தெரிவிக்கையில்..

கடந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றிய 144 மாணவர்களில் 122 மாணவர்கள் கணிதப்பாட சித்தியுடன் உயர்தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இது 85 வீதமாக காணப்படுகின்ற அதேவேளை சுற்று நிருபத்திற்கு அமைவாக மீள எழுதித் தரும் வகையில் 9 பேர் காணப்படுகின்றார்கள்.

எனவே 91 வீதமான மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். 3 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்ற அதே வேளை 3 மாணவர்கள் 8A சித்திகளைப் பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்..

சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்..

-வவுனியா நிருபர் பாஸ்கரன் கதீசன்-

V4