நடிகைகள் விளையாட்டு வீரர்களுடன் காதல் வயப்படுவது சகஜம். குறிப்பாக கிரிக்கெட் வீரர்களுடன் நெருங்கி பழகுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
டாப்சியும் விளையாட்டு வீரர் ஒருருடன் காதல் வயப்பட்டுள்ளார். இவர் விரும்புவது கிரிக்கெட் வீரர் அல்ல. டென்மார்க்கை சேர்ந்த பட்மின்டன் விளையாட்டு வீரர் மத்தியாஸ்போயை.
இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்ப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. மாத்தியாஸ்போ தனது டுவிட்டரில் டாப்சியை காதலி என குறிப்பிட்டு இருந்தார். டாப்சி இதற்கு பதில் சொல்லாமல் இருந்தார்.
சமீபத்தில் மத்தியாஸ்போ பங்கேற்ற விளையாட்டு போட்டி நடந்தது. இதை காண டாப்சி நேரில் சென்றார். விளையாட்டு மைதானத்தில் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு மத்தியாஸ் பாய்ன்ட் எடுக்கும் போதெல்லாம் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
எதிரணி வீரர் புள்ளி எடுக்கும்போது மௌனமாக இருந்தார். இதன்மூலம் மத்தியாஸ்போ–டாப்சி காதல் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது என்கின்றனர்.
இவர்கள் திருமணம் விரைவில் நடக்கும் என்றும், இருவீட்டிலும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.





