தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான தமிழரசு கட்சியை தடை செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சி நாட்டில் தனி இராச்சியமொன்றை உருவாக்கும் நோக்கில் நிறுவப்பட்ட கட்சி என தீர்ப்பளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்குள் வேறு இராச்சியமொன்றை அமைப்பதற்கு எந்த வகையிலும் இலங்கைப் பிரஜைகள் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தமிழரசுக் கட்சியும் செயற்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
களனி பொல்ஹேன என்னும் இடத்தைச் சேர்ந்த ஹிக்கட்டுவ கோரலகே தொன் சந்திரசோம என்பவரினால் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, தேர்தல் ஆணையாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட நபரோ அல்லது அரசியல் கட்சியொன்றோ நாட்டை பிளவுபடுத்தும் வகையில் செயற்பட்டால் அதற்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.