வங்காளதேசத்தில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின. இப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
இப்போட்டி தொடர்பாக சூதாட்டம் நடைபெற்றதாக சூதாட்டத்தரகர்கள் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், நேற்றிரவு எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மும்பை வால்கேஷ்வர் பகுதியில் உள்ள அக்ருதி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் தரகர்கள் ராஜேஷ் மேத்தா, நிலேஷ் ஷா, நரேஷ் ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து மூன்று செல்போன்கள், ஒன்பது தொலைபேசிகள், லப்டாப், ஐபேட், பிரிண்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் நரேஷ் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறியதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.





