பெற்ற மகளை கொடூரமாக தாக்கிய தந்தை : பரிதாபமாக பலியான 14 வயது சிறுமி : இலங்கையில் நடந்த கொடூரம்!!

2213

கம்பளையில்..

சிறிய தந்தை மற்றும் தந்தையின் தாக்குதலால் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பளையில் பகுதியில் வைத்து, குறித்த சிறுமியை ஆண் நண்பருடன் பார்த்த அவருடைய சிறிய தந்தை சிறுமியை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் செவ்வாய்க்கிழமை காலை, சிறுமி உடல்நிலை சரியில்லாமல், வலியால் புலம்பியபோது, சிறுமியின் தந்தை அவரை நித்திரை செய்ய விடமாட்டேன் என்று கூறி தாக்கியுள்ளார்.

இதன் பின்னர் சிறுமியை அவரது தாயார் கம்பளை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில் தமது மகள் தாக்குதல் காரணமாகவே உயிரிழந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை மற்றும் சிறிய தந்தையை பொலிசார் கைது செய்தனர்.