
தொடர்ந்து இறுதிப்போட்டியில் தோல்வியைத் தரும் சோகத்திற்கு இலங்கை இந்த வருடம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இலங்கை அணி 2007, 2011ம் ஆண்டுகளில் ஒரு நாள் போட்டி உலக கிண்ண இறுதி ஆட்டத்திலும் 2009, 2012ம் ஆண்டுகளில் T20 உலக கிண்ண இறுதி ஆட்டங்களிலும் தோல்வி கண்டிருந்தது.
சமீப காலமாக அவர்களை வாட்டி வதைத்த இந்த சோகத்திற்கு ஒரு வழியாக நேற்று முடிவு கட்டி விட்டனர்.
இலங்கை மூத்த வீரர்களான மஹேல ஜெயவர்த்தன, சங்கக்கார இருவரும் இந்த ஆட்டத்துடன் சர்வதேச T20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு பரிசளிக்கும் வண்ணம் இலங்கை கிண்ணத்தை கைப்பற்றியது.
முதன்முறையாக உலகக் கிண்ணத்தை கையில் ஏந்தி மனநிறைவுடன் இருவரும் T20 கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்தனர்.





