
உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளின் தரப்படுத்தலில் இலங்கை அணி மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
இலங்கை அணி 133 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இந்திய அணி 130 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பாகிஸ்தான் அணி மூன்றாம் இடத்திலும் உள்ளன.
தென்னாபிரிக்க அணி நான்காம் இடத்திலும் மேற்கிந்திய தீவுகள் அணி ஐந்தாம் இடத்திலும் காணப்படுகின்றன.
2014ம் ஆண்டுக்கான T20 உலகக் கோப்பையை சுவீகரித்ததன் மூலம் இலங்கை அணி தரப்படுத்தலில் முன்னிலை பெற்றுள்ளது.
இதேவேளை உலக தரப்படுத்தல் வரிசையில் துடுப்பாட்டத்தில் ஐந்தாவது இடத்தில் இருந்த குசல் பெரேரா, உலக தரத்தில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறிய இலங்கை வீரர் என்ற நிலையை எட்டியுள்ளார்.
T20 கிரிக்கட் போட்டிகளில் இருந்து விடைபெறும் மஹேல ஜயவர்தனா 12வது இடத்திலும், குமார் சங்கக்கார 17வது இடத்தையும் பெற்றுள்ளனர்.





