வவுனியா சண்முகானந்தா மகாவித்தியாலத்தில் சரஸ்வதி சிலை திறந்து வைப்பு!!

1175

சரஸ்வதி சிலை..

வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தில் சரஸ்வதி சிலை கல்லூரி அதிபர் கணேசலிங்கம் தலைமையில் இன்று (23.12.2021) திறந்து வைக்கப்பட்டது.



நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் கலந்துகொண்டு சரஸ்வதி சிலையை திறந்து வைத்தார்.

பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர் எஸ்.தனஞ்சயனின் நிதிப்பங்களிப்பில் சரஸ்வதி சிலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. நிகழ்வின் முன்னதாக அதிதிகள் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

இந்நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி ரஞ்சித்குமார், பழைய மாணவர்சங்கத் தலைவர் (லண்டன் கிளை) ஞானேஸ்வரன், ஓய்வுநிலை அதிபர் அமிர்தலிங்கம், வவுனியா நகரசபை உறுப்பினர் எஸ்.காண்டீபன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.