நடு வீதியில் பொலிஸாரால் தாக்கப்பட்ட நபர் : உண்மை காரணம் என்ன?

1487

கேகாலை பிரதேசத்தில்..

போக்குவரத்துக் காவலர்களில் இருவர் சாலையில் சென்ற நபரைத் தாக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கேகாலை பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட நபர் கேகாலையில் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



போதைப்பொருளுக்கு அடிமையான இவர், ஹபுதுகல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் கைது செய்ய முற்பட்ட போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.