நடு ஆற்றில் தீப்பிடித்து எரிந்த கப்பல் : 32 பேர் பரிதாபமாக பலி!!

713


தீப்பிடித்து எரிந்த கப்பல்..பங்களாதேஷில் இன்று காலை படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.பங்களாதேஷின் தெற்கு பகுதியில் தலைநகர் தோகாவில் இருந்து 250 கிலோ மீற்றர் தூரத்தில் ஜகாகதி பகுதியில் நடு ஆற்றில் இந்த தீ விபத்து இன்று காலை நடைபெற்றுள்ளது.
ஓபிஜான் 10 என்கிற மூன்றடுக்கு கொண்ட படகில் தீ விபத்து ஏற்பட்டது. படகில் பயணித்த பலர் ஆற்றில் குதித்து தப்பியுள்ளனர். அதே நேரத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.


கப்பலில் சுமார் 500 பேர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெரும்பாலானோர் தீயினால் இறந்தனர் மற்றும் சிலர் ஆற்றில் குதித்த பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கப்பலின் இயந்திர அறையில் தீ தோன்றியதாக நம்பப்படுகிறது, “தீக்காயங்களுடன் சுமார் 100 பேரை பரிசலில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து அப்பகுதி பொலிஸ் தலைமை அதிகாரி மொய்னுல் கருத்து வெளியிடுகையில், “தற்போது வரை 32 பேரின் உடல்களை கண்டெடுத்துள்ளோம். பெரும்பான்மையானவர்கள் தீயினால் இறந்துள்ளனர்.

உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.” என்று தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.