11 வயது அக்காவை சுட்டுக் கொன்ற 2 வயது தம்பி!!

647

Kid

அமெரிக்காவில் 2 வயது சிறுவன் தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதில் அவனுடைய 11 வயது சகோதரி உயிரிழந்தார்.

அமெரிக்காவின் பிலெடெல்பியா பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த பெண்ணின் ஆண் நண்பர், தான் எடுத்து வந்த கைத்துப்பாக்கியை இந்த பெண் வீட்டில் மறந்து வைத்து விட்டு சென்றார்.

இந்த துப்பாக்கியை எடுத்து நான்கு குழந்தைகளும் விளையாடியுள்ளனர். அப்போது இந்த குழந்தைகளின் தாய், குளியலறையில் இருந்துள்ளார்.

இப்பெண்ணின் 2 வயது மகன் துப்பாக்கி விசையை தவறாக அழுத்த, அங்கு விளையாடி கொண்டிருந்த 11 வயது சிறுமியின் மார்பில் குண்டு பாய்ந்தது. இதில் சிறுவனின் சகோதரி அங்கேயே உயிரிழந்தார்.