உடலுக்குள் ஊடுருவி அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ வடிவமைப்பு!!

443

Robot

நோயாளியின் உடலுக்குள் ஊடுருவி, அறுவை சிகிச்சை செய்யும் சிறிய ரோபோவை விஞ்ஞானிகள் வடிவமைத்து உள்ளனர்.

அமெரிக்காவின், நெப்ராஸ்கா – லிங்கன் பல்கலை விஞ்ஞானிகள் இதை வடிவமைத்துள்ளனர்.

டைனி ரோபோ சர்ஜன் என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ, சிறு கீறல் மூலம் வயிற்றுக்குள் ஊடுருவி குடல் பகுதியில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும். இந்த அறுவை சிகிச்சை மூலம் குடல் புண்கள் குடல்வால் நோய் ஆகியவை சரி செய்யப்படும்.

காயங்களை தைப்பதற்கும் இந்த ரோபோ சர்ஜன் உதவுகிறது. வைத்தியர்களின் கண்காணிப்பில் இயக்கப்படும் இக்கருவியால் இது இயங்கும்.