வவுனியாவில் இளம் பெண்ணின் படம் ஆணொருவருடன் நிர்வாணமாக பேஸ்புக்கில் வந்ததால் நேற்று குறித்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
பட்டானிசூர் புளியங்குளத்தில் வசித்து வந்த 29 வயதுடைய குறித்த பெண்ணின் படத்துடன் சேர்த்து ஆண் ஒருவரின் படமும் பேஸ்புக்கில் நிர்வாணமாக வந்ததால் நஞ்சுண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
அப்பெண்ணின் முகத்தை நிர்வாணப் பெண்ணின் படத்துடன் இணைத்து, அத்தோடு அப்பெண்ணின் நண்பரான ஆண் மதபோதகர் ஒருவரின் படத்தையும் இணைத்து அப் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளனர் .
குறித்த பெண் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் அதேவேளை பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.