பிரகாஷ்ராஜை கண்ணீர் விட்டு அழ வைத்த இளையராஜா!!

418

Pirakash Raj

வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் படங்களில் முரட்டுத்தனமாக நடித்திருந்தாலும் நிஜத்தில் மிகவும் மென்மையான, யதார்த்தமான மனிதர். குறிப்பாக செண்டிமென்ட்டில் உருகி விடுவார்.

அதனால்தான் ஒரு வில்லன் நடிகராக இருக்கும் அவர் இப்போது உன் சமையல் அறையில் என்ற படத்தை இயக்கி வருகிறார். கணவன்-மனைவிக்கிடையே ஏற்படும் அன்பு, பாசம், உறவுகளை படமாக்கி வருகிறார்.

அதோடு இந்த படத்தில் இளையராஜாவை இசையமைக்க வைத்திருக்கிறார். அவரை தவிர எவராலும் சிறப்பான இசையை தர முடியாது என்று சொல்லும் பிரகாஷ்ராஜ், அப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான பாடலை வெளியிட்டபோது இளையராஜாவுக்கு பெரிய மலர் அபிஷேகமே செய்திருக்கிறார்.

அவர் என்னை இசையால் அபிஷேகம் செய்தார். பதிலுக்கு நான் அவரை மலரால் அபிஷேகம் செய்திருக்கிறேன் என்று கூறுகிறார் பிரகாஷ்ராஜ்.

மேலும் என் படத்தில் மதுரை மல்லிகைப்பூ, இட்லி பற்றி ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். அதில் அத்தனை உயிரோட்டம் உள்ளது. தினமும் நான் அதை தவறாமல கேட்கிறேன். வேலைப்பளுவிலும் அது என்னை கேட்கத்தூண்டுகிறது என்று சொல்லும் பிரகாஷ்ராஜ், பாலாவின் தாரை தப்பட்டை படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ள ஒரு பாடலைக்கேட்டேன்.

என்னையும் அறியாமல் கண்ணீர் வந்து விட்டது. அப்படியொரு உருக்கம் அந்த பாடலில் இருந்தது. 1000 படங்களுக்கு இசையமைத்தும், இன்னும் அற்புதமான இசையை கொடுத்துக்கொண்டிருக்கும் இசைஞானிக்கு நிகர் யாருமில்லை என்கிறார் பிரகாஷ்ராஜ்.