இலங்கை முழுவதும் செயற்கைக்கோள் மூலம் அதிவேக இணைய வசதி

619

இலங்கை முழுவதும் செயற்கைக்கோள்

இலங்கை முழுவதும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் இணைய வசதியை வழங்குவதற்கு ஸ்டார்-லிங்க் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அமெரிக்க நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் தொலைதூர கிராம பகுதிகள் உட்பட நாடு முழுவதும் எவ்வித சிக்கலுமின்றி இணைய வசதியை வழங்க முடியும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது, ​​இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து கடலுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ள 7 நீர்மூழ்கி கேபிள்களின் வலையமைப்பின் மூலம் இலங்கைக்கு இணைய வசதிகள் வழங்கப்படுகின்றது.


அவ்வாறு நாட்டிற்கு கிடைக்கும் இணைய வசதிகள் பைபர் தொழில்நுட்பம் மற்றும் 3G அல்லது 4G கையடக்க தொழில்நுட்பம் மூலம் இணைய பயனர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

எனினும், இந்த முறையில் இணைய சேவை வழங்கும் போது புவியியல் தடைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால், முறையான இணைய வசதிகள் கிடைக்காமையினால் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.