5 மாத கர்ப்பமாக இருந்த காதல் மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவன் : அதிர்ச்சிக் காரணம்!!

464

கொலை..

மதுரையில் கணவரே தனது கர்ப்பிணி மனைவியை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள சித்தூர் கிராமத்தில் வசிக்கும் கணபதி ராஜா என்ற நபருக்கு நாகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களும் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில் நாகலட்சுமி கடந்த திங்கள் அன்று வீட்டின் மாடியில் துணி காயவைத்து கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்துவிட்டதாக கூறி உள்ளனர்.


ஆனால் நாகலட்சுமியின் மரணத்தில் அவரது அண்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். இதனை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கணபதி ராஜா அவரது மனைவியிடம் திருமணத்தின் போது 10 பவுன் நகை கேட்டு உள்ளார்.

ஆனால் நாகலட்சுமியின் குடும்பத்தினரால் அந்த நகையை தர இயலாத நிலையில் கடைசியில் கணபதி ராஜா அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு உள்ளார்.


ஆனால் அதன் பிறகு மீண்டும் தனது மனைவியை நகை கேட்டு டார்ச்சர் செய்து உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது. இதனை அடுத்து கணபதி ராஜா மனைவி நகை தராததால் ஆத்திரத்தில்,

அவரை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்து உள்ளார் என்பது தெரிய வந்து உள்ளது. மேலும் நாகலட்சுமி ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.