சூரிய ஒளியால் சித்திரம் வரையலாமா : நிரூபித்துக் காட்டிய 9 வயதுச் சிறுவன்!!

541

அம்பாறை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய தமிழ்க் கிராமமான வளத்தாப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ரகுநாதன் கிசோத், சூரிய ஒளியால் சித்திரம் வரைய முடியுமென்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

வளத்தாப்பிட்டி அ.த.க.பாடசாலையில் 4ம் வகுப்பில் கற்றுவரும் குறித்த சிறுவன், வகுப்பில் தொடர்ந்தும் முதல் மாணவனாக திகழ்வதாக அப்பாடசாலையின் அதிபர் பி.கமலநாதன் சான்று பகர்கிறார்.

குறித்த சிறுவனின் தந்தை ரகுநாதன் வெல்டிங் தொழில் செய்து வருபவராவார். பல வசதியீனங்களுக்கு மத்தியில் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் வாழும் ஒரு சிறுவனின் முயற்சியை பாடசாலை சமூகத்தினர் பாராட்டுகின்றனர்.

இச்சிறுவன் சூரிய ஒளியை குவிவு வில்லையைப் பாவித்து ஒளியை ஓரிடத்தில் குவியச் செய்கிறார்.சூரிய ஒளியை அசையக் கூடிய கைவில்லையைப் பயன்படுத்தி ஒடுக்கி அவ் ஒளியால் சித்திரம் வரைகிறான் எழுதுகிறான்.

இச்சிறுவன் 03 மாத காலம் முயற்சி செய்திருக்கிறான். கடதாசியில் எழுதி பார்த்திருக்கிறான். றெஜிபோமில், றப்பரில் வரைந்து பார்த்திருக்கிறான்.

அதன் செருப்பில் பெயர் பொறித்துப் பார்த்திருக்கிறான். இறுதியாக கார்ப்பட் துணியில் எழுதி, வரைந்து பார்த்தான்.சரி வந்தது. அதன் பின்னரே இதனை பலருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

இதற்காக தனது தந்தையின் உதவியுடன் ஒரு உபகரணத்தைத் தயாரித்து இதனை தற்சமயம் செய்து காட்டுகிறார். அவரது இளவயது ஆக்க முயற்சியை பாராட்டுவோம்.

1 2 3 4 5