உலக சுற்றுலா அழகியாக இலங்கைப் பெண் தெரிவு!!

1287

நலிஷா பானு..

உலக சுற்றுலா அழகியாக இலங்கை பெண் நலிஷா பானு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 30 நாடுகளுக்கிடையில் நடைபெற்ற உலக சுற்றுலா அழகி போட்டியில்,

இலங்கை பெண் வெற்றிப்பெற்று கிரீடத்தை சுவீகரித்துக்கொண்டுள்ளார். குறித்த போட்டி நிகழ்வுகள் பிலிப்பைன்ஸில் நடைபெற்றுள்ளன.

உலக சுற்றுலா அழகி போட்டியில் இதற்கு முன்னர் இலங்கைக்கு மூன்றாவது இடம் கிடைத்திருந்த நிலையில், கிரீடத்தை சுவீகரித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.