வரிசையில் நிற்க விடுமுறைக்கு விண்ணப்பித்த அரச ஊழியர் : இலங்கையில் நடந்த வினோதம்!!

842

இலங்கையில் முழுவதும் சமையல் எரிவாயு, பால் மா மற்றும் மண் எண்ணெய் ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்காக மக்கள் வரிசைகளில் நிற்கும் நிலைமை காணப்படுகிறது.

இந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் மணிக்கணக்கில் வரிசைகளில் நிற்பதை பெரும்பாலும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

வரிசையில் நிற்கும் மக்களில் சிலர் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு ரீதியான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறு பொருட்களை கொள்வனவு செய்ய வரிசையில் நிற்கும் நபர்கள் மத்தியில் அரச மற்றும் தனியார் துறையினர் என்ற வித்தியாசத்தையும் காணமுடியவில்லை.இந்த நிலையில் அண்மையில் ஒரு நாள் அரச நிறுவனம் ஒன்றின் ஊழியர் பால் மா மற்றும் எரிவாயு வரிசையில் நிற்பதற்காக தனது நிறுவனத்தில் விடுமுறை கோரி சமர்ப்பித்திருந்த விண்ணப்பம் ஒன்றின் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.


அந்த ஊழியர் விடுமுறைக்கான காரணம் கேட்கப்பட்டுள்ள பகுதியில் “எரிவாயு மற்றும் பால் மா வரிசையில் நிற்பதற்காக” என்று குறிப்பிட்டுள்ளார்.