இலங்கை அணியினருக்கு இன்று பாராளுமன்றத்தில் செங்கம்பள வரவேற்பு!!

425

C1 C2

20க்கு 20 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு பாராளுமன்றத்தில் இன்று செங்கம்பள வரவேற்பளிக்கப்படவுள்ளது.

செங்கம்பள வரவேற்பை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் அணியினர் சபாநாயகர் கலரிக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

பங்களாதேஷில் நடைபெற்ற 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றி வாகை சூடிய இலங்கை அணி நேற்று நாடு திரும்பியது. இது தொடர்பாக நேற்று சபையில் பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இதேவேளை சபாநாயகர் சமல் ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில், இலங்கை அணியினரை கெளரவிக்கும் வகையில் அவர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து செங்கம்பள வரவேற்பு அளிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய இலங்கை கிரிக்கெட் அணிக்கு இன்று பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டு செங்கம்பள வரவேற்பளிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் பகல் போசன விருந்துபசாரம் வழங்குகிறார்.

இன்று மாலை 5.00 மணிக்கு சபையில் இலங்கை கிரிக்கெட் அணியினர் சபாநாயகர் கலரியில் அமர்ந்திருக்க, அவர்களை வாழ்த்தி விசேட பாராட்டு பிரேணையும் சபையில் சமர்பிக்கப்படுவதுடன், எதிர்தரப்பு ஆளும் தரப்பு உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

அதேவேளை நேற்றைய தினம் இலங்கை அணியினருக்கு காலிமுகத்திடலில் மகத்தான வரவேற்பு நிகழ்வு நடைபெற்றதுடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.