இந்தியாவின் பிரபல கிரிக்கட் வீரர் யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.
அண்மையில் பங்களாதேஸில் நடைபெற்ற உலகக் கிண்ண 20-20 போட்டியில் இலங்கை அணியிடம், இந்தியா தோல்வியடைந்திருந்தது.
சகலதுறை ஆட்க்காரரான யுவராஜ் சிங் இறுதிப் போட்டியில் சோபிக்கத் தவறியிருந்தார். இதனைத் தொடர்ந்து சண்டிகாரில் அமைந்துள்ள யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை இந்திய மக்களுக்கு இடையில் வித்தியாசம் காணப்படுகின்றது. அந்த நாட்டில் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் இருக்கின்றார்கள் என பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
விளையாட்டு வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பல சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. யுவராஜ் சிங்கின் வீடு தாக்குதல் நடத்தப்பட்டமை வருத்தமளிக்கின்றது, இது தொடர்பில் கவலையடைகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.