T20 தோல்வியின் எதிரொலி : இந்திய அணி வீரர்கள் இருவருக்கு ஐபிஎல் போட்டி தொடர்பில் அழுத்தம்!!

447

IPL

பங்களாதேஸில் இலங்கைக்கு அணிக்கு எதிரான T20 தோல்வியின் பின்னர், இந்திய அணியின் இரண்டு வீரர்களுக்கு ஐபிஎல் போட்டிகள் தொடர்பில் பாரிய அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக இலங்கையுடனான ஐசிசி T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 21 பந்துகளை சந்தித்து 11 ஓட்டங்களை மாத்திரமே யுவ்ராஜ் சிங் பெற்றமையே தோல்விக்கான பிரதான காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் உலக கிண்ணப் போட்டிகளுக்கு முன்னர் பங்களாதேஸில் நடைபெற்ற ஆசிய கிண்ணப் போட்டிகளில் தினேஸ் கார்த்திக் சிறப்பாக செயற்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் யுவ்ராஜ் சிங்கை ஐபிஎல் போட்டிகளில் விளையாட ரோயல் செலஞ்சர்ஸ் அணி 14 கோடி ரூபாவுக்கு ஏலம் எடுத்துள்ளது
டெல்லி டெயார்டெவில் அணி தினேஸ் கார்த்திக்கை 12.5 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுத்துள்ளது

இந்தநிலையில் இருவரின் திறமைகள் குறித்து ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன