வவுனியா மாவட்ட செயலகத்தில் சுகந்தம் நூல் வெளியிட்டு விழா!!

617


நூல் வெளியிட்டு விழா..வவுனியா மாவட்ட செயலகமும் மாவட்ட கலாசார அதிகாரசபையும் இணைந்து நடாத்திய சுகந்தம்-01 நூல் வெளியிட்டு விழா மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்றிருந்தது.குறித்த நிகழ்வு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (05.01.2022) காலை 10 மணிக்கு நடைபெற்றிருந்ததுடன் நிகழ்வின் பிரதம விருந்தினராக பி.ஏ.சரத் சந்திர கலந்து சிறப்பித்தார்.
நூலினை மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார் வெளியிட்டு வைக்க முதற்பிரதியை அரச அதிபர் பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து நூலின் சிறப்புப் பிரதிகள் சிறப்பு விருந்தினர்கள் , கௌரவ விருந்தினர்கள் , அதிதிகள் ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.


நூலிற்கான வெளியீட்டுரையை நூலாசிரியர் நா.பார்த்தீபன் நிகழ்த்த ஆய்வுரையை அபிவிருத்தி உத்தியோகத்தர் சந்திரா ராஜேஸ்வரன் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன் ஆகியோரும் அதிதிகளாக அரச உயர் அதிகாரிகள் , கவிஞர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், இலக்கியத் துறை சார்ந்தோர், அரச அதிகாரிகள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.