வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!!

2054


விபத்து..வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (05.01.2022) மாலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,வவுனியா, குருமன்காடு – திருநாவற்குளம் பிரதான வீதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றில் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்த போது, புகையிரத பாதை ஊடாக புகையிரதம் சென்றுள்ளது.இதன்போது புகையிரதப் பாதைப் பகுதியை அண்மித்து மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த மாடுகள் புகையிரத சத்தம் காரணமாக சிதறி ஓடிய போது வீதியால் சென்ற குறித்த மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.


குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் வவுனியா வைத்தியசாலைப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.