வவுனியா றொக்கட் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டு, களியாட்ட விழா!!

568

R3

எதிர்வரும் 13.04.2014 அன்று வவுனியா கோவில்குளம் இளைஞர் கழக அனுசரணையில் வவுனியா றொக்கட் விளையாட்டு கழகத்தின் 35வது வருட பூர்த்தியை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் புதுவருட விளையாட்டு விழாவும் இன்னிசை இரவிலும் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அத்துடன் எதிர்வரும் 13ம் திகதி மாலை 7 மணிக்கு கோவில்குளம் இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் முன்னாள் துணை முதல்வருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஏற்பாட்டில் கோவில்குளம் இளைஞர் கழகமாகிய எமது கழக அனுசரணையில் வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரி மைதானத்தில் எமது இசை இளவரசன் திரு.கந்தப்பு ஜெயந்தனின் இசை மழையில் வவுனியா ராகஸ்வரம் இசைக்குழுவின் மாபெரும் இன்னிசை இரவு நடைபெற உள்ளதால் அணைத்து ரசிகர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

பிரச்சாரப் பிரிவு,
கோவில்குளம் இளைஞர் கழகம்.

R1 R2