வவுனியாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விஐயம் : பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!!

1447

பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு..

எதிர்க்கட்சித் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச வவுனியா மாவட்டத்திற்கு இன்று வருகை தரவுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மதஸ்தலங்கள் வழிபாடு, உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு, வைத்தியசாலை விஐயம், ஊடக சந்திப்பு, மக்கள் சந்திப்பு, பிராந்திய காரியாலயம் திறப்பு விழா போன்ற பல்வேறு நிகழ்வுகளில் சஜித் பிரேமதாச உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிலையிலே வைத்தியசாலை வளாகம், ஏ9 வீதி, வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி, குருமன்காடு போன்ற பகுதிகளில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.