வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு!!

1149

இரத்த சுத்திகரிப்பு இயந்திரம்..

ஐக்கிய மக்கள் சக்தியின்’எதிர்க் கட்சியிலிருந்து ஒரு மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருவில் உருவாகி,

நாடளாவிய ரீதியாக செயற்படுத்தப்பட்டு வரும் ‘ஜன சுவய’ திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 23 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரத்த மாற்று இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது
குறித்த நிகழ்வு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இன்று (07.01.2022) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.


நிகழ்வில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்டு இரத்த மாற்று இயந்திரத்தினை வைத்தியசாலை பணிப்பாளர் கலைநாதன் ராகுலனிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

மேலும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாட் பதியூதின், புத்திக்க பத்திரன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ்,


ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட அமைப்பாளர்களான ரசிக்கா பிரியதர்சினி, பி.ஏ.கருணாதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் ,வைத்தியசாலை வைத்தியர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.