வவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

3170


சாம்பல்தோட்டம்..வவுனியா – நெளுக்குளம், சாம்பல்தோட்டம் பகுதி கிணறு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (06.01) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,வவுனியா – சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வரும் ரமேஸ் (வயது 34) இரண்டு பிள்ளைகளின் தந்தை வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபையில் சிற்றுாழியராக கடமையாற்றி வருகின்றார்.
நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய இவர், இரவு 8 மணியளவில் குளித்துவிட்டு வருவதாக வீட்டிலுள்ள வயல் கிணற்றுக்கு சென்றுள்ளார் .

எனினும் பல மணி நேரமாகியும் அவர் அங்கிருந்து திரும்பிவரவில்லை. தேடிப்பார்த்தபோது அவரைக்கண்டு பிடிக்க முடியவில்லை. அயலவர்களின் , உதவியுடன் கிணற்றில் தேடியபோதும் கிடைக்கவில்லை.


இதனையடுத்து தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தின் உதவியுடன் கிணற்றிலிருந்த இறைக்கப்பட்ட நிலையில் நேற்று (06) இரவு 11 மணியளவில்குறித்த குடும்பஸ்தரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

இவருக்கு வலிப்பு ஏற்படுவதாகவும் குளித்துக்கொண்டிருந்தபோது, வலிப்பு ஏற்பட்டு கிணற்றிற்குள் தவறி வீழ்ந்திருக்கலாம் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.

சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.