கயிற்றின் மேல் நடந்து நதியை கடந்த வினோத மனிதர்!!(வீடியோ)

430

Walking

பிரான்சில் நபர் ஒருவர் கயிற்றின் மேல் நடந்து நதியை கடந்த சம்பவம் பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மாகாணத்தில் உள்ள செயின் நதியின் மேல் நேற்று முன் தினம், டென்னிஸ் ஜொசலின் என்ற கலைக்கூத்தாடி, கயிறை கட்டி நடந்துள்ளார்.

நதியிலிருந்து சுமார் 25 மீற்றர் உயரத்திற்கு மேல் கட்டப்பட்ட கயிற்றில், 150 மீற்றர் கொண்ட நதியின் மொத்த பரப்பளவினை 30 நிமிடங்களில் இவர் கடந்து சாதனை படைத்துள்ளர்.

இவரது சாகசத்தை பார்க்க ஏராளமான மக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதிலும் குறிப்பாக இவர் சிறிது தூரம் கண்ணை கட்டி கயிற்றின் மேல் நடந்ததை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

இதுகுறித்து டென்னிஸ் கூறுகையில், நான் கயிற்றின் மேல் நடக்க தொடங்கியபோது பறப்பது போல் காணும் கனவை நிறுத்திவிட்டேன், ஏனெனில் நான் நிஜத்திலேயே பறக்கிறேன் என கூறியுள்ளார்.

இதேபோல் டென்னிஸ், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, செயின் நதியைக் கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.