மின் வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு!!

1473

விசேட அறிவிப்பு..

இன்று சனிக்கிழமை (08) மின்வெட்டு இடம்பெறாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (07.01) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சுமார் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார சபை முன்னர் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று மின்வெட்டு இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் எரிபொருளுக்கான பணம் செலுத்தப்படாததன் காரணமாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த டிசம்பர் மாதம் 23ம் திகதி முதல் மின்சார சபைக்கு எரிபொருளை விடுவிக்கவில்லை.

எரிபொருள் வழங்கப்படாவிடின் சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள பார்ஜ் மவுண்டட் அனல்மின் நிலையத்திலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது என இலங்கை மின்சார சபை எச்சரித்துள்ளது.

கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள பார்ஜ் மவுண்டட் மின் உற்பத்தி நிலையம் 60 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது அதே சமயம் சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் 102 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

எவ்வாறாயினும், சபுகஸ்கந்த அனல்மின் நிலையம் மற்றும் கொழும்பு துறைமுக பார்ஜ் மவுண்டட் மின் திட்டம் இன்று மீண்டும் மின்சார உற்பத்தியை ஆரம்பித்துள்ளது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-