மின் துண்டிப்பு செய்ய வேண்டாம் : ஜனாதிபதி பணிப்பு!!

873

மின் துண்டிப்பு..

தற்போதைய சூழ்நிலையில் மின்சார விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரை தொடர்பான தகவல்களை அமைச்சர் காமினி லொக்குகே வெளியிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் மின்சார விநியோகத்தை துண்டிக்காது, மின் விநியோகத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று (10.01) முதல் மின் விநியோக தடையை ஏற்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய காலப் பகுதி மற்றும் நேரம் குறித்து இலங்கை மின்சார சபையே தீர்மானிக்கும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் மின் துண்டிப்பு மேற்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி பணிப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.