வவுனியா கற்பகபுரத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை!!

531

Robbery

வவுனியா, கற்பகபுரத்தில் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டு 15 பவுண் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

சிறிய துப்பாக்கிகளுடன் வருகைத்தந்த நால்வரால் நேற்றிரவு பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்தாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.