தண்டவாளத்தில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிய இளைஞர்கள் பரிதாபமாக பலி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

945


ராஜஸ்தான்..ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் வீட்டில் படிப்பதற்காக வெளியே செல்கிறோம் எனக் கூறிவிட்டு தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடியிருக்கிறார்கள்.ரயில் வருவதை கூட கண்டுகொள்ளாமல் தீவிரமாக பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் மீது ரயில் மோதியிருக்கிறது. இதில் நிகழ்விடத்திலேயே இருவரும் பலியாகியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சதார் காவல் நிலைய போலிஸார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.


இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ரயில் மோதியதில் உயிரிழந்தது லோகேஷ் மீனா (22) மற்றும் ராகுல் என்றும் இருவரும் சகோதரர்கள் என்றும் தெரிய வந்தது.

போட்டித் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்த இருவரும் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையானதன் விளைவாகவே இந்த விபரீதம் நடைபெற்றுள்ளது என உதவி காவல் ஆய்வாளர் மனோகர் லால் கூறியுள்ளார்.


உடற்கூராய்வுக்கு பிறகு இளைஞர்களின் சடலங்கள் அவர்களது பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் ஆல்வார் பகுதி மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.