வவுனியா மாவட்டத்தின் பிரதான சங்கங்கள் இணைந்து மாபெரும் சிரமதானப்பணி முன்னெடுப்பு!!

1230

சிரமதானப்பணி..

வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் அழகான வவுனியா நகரை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் இன்று (11.01.2022) காலை வவுனியா நகரில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

இச் சிரமதானப் பணியில் வவுனியா வர்த்தக சங்கத்தினர், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர், தனியார் பேரூந்து சங்கத்தினர் ஆகியோரும் இணைந்து பங்குபற்றியிருந்ததுடன் ஏ9 பிரதான வீதி, பஜார் வீதி, ஹோரவப்பொத்தானை வீதி என நகரில் பல இடங்கள் சுத்தம் செய்யப்பட்டது.
அத்துடன் நகரிலுள்ள அரச திணைக்களங்கள் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.


சிரமதானப் பணிக்கு நகரசபையினர் வாகனங்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்கியிருந்ததுடன் சிரமதானப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான சிற்றுண்டிகள் வவுனியா வர்த்தக சங்கத்தினரினால் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.