காணாமல் போன 15 வயது சிறுமி தொடர்பில் தகவல் இல்லை : தேடும் பணி தொடர்கிறது!!

905


நேஹா கௌமதி ஹேரத்..கடந்த 7ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் மஹரகமையை சேர்ந்த 15வயதான சிறுமியை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.எனினும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் எந்த தகவலையும் வெளியிடவில்லை. குறித்த சிறுமியை கண்டு பிடிக்கும் வகையில் பொலிஸார் சிறப்பு அணி ஒன்றை அமைத்துள்ளனர்.
மஹரகம, நாவின்ன என்ற இடத்தை சேர்ந்த நேஹா கௌமதி ஹேரத் என்பவரே காணாமல் போயுள்ளவராவார். இவரின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார், இவர் 5அடி 3 அங்குலம் உயரமானவர் என்பதுடன் மெலிந்த உடலமைப்பைக் கொண்டவர் என்று பொலிஸார் அறிவித்திருந்தனர்.


இந்தநிலையில் இவரை பற்றி தெரிந்தவர்கள் – மஹரகம பொலிஸ் பொறுப்பதிகாரி ஊடாக 071-8591645, 011-2850222 அல்லது மஹரகம பொலிஸ் நிலையத்தின் 011-2850700 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.