வவுனியா நகரில் துவிச்சக்கரவண்டி மாயம் : பொதுமக்களின் உதவியினை நாடியுள்ள பொலிஸார்!!

2337

துவிச்சக்கரவண்டி மாயம்..

வவுனியா நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி மாயமானமை தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் உதவியினை நாடியுள்ளனர்.

வவுனியா முதலாம் குறுக்குத்தெரு வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி நேற்று (11.01) காலை 10.44 மணியளவில் இனந்தெரியாத நபரினால் களவாடப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் துவிச்சக்கரவண்டி உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டினையடுத்து குறித்த தனியார் நிதி நிறுவனத்தின் சி.சி.ரி.வி காணோளி உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


அத்துடன் துவிச்சக்கரவண்டியினை களவாடி சென்றவரின் உருவம் சி.சி.ரி.வி காணோளியில் பதிவாகியுள்ளதுடன் அவர் தொடர்பில் விபரம் தெரிந்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.