வவுனியாவில் முச்சக்கரவண்டிகளுக்கு கொவிட் பாதுகாப்பு திரை வழங்கி வைப்பு!!

1126


கொவிட் பாதுகாப்பு திரை..வவுனியா மாவட்டத்தினை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு கொவிட் பாதுகாப்பு திரை வழங்கி வைக்கப்பட்டது.வவுனியா பொலிஸாரின் ஒத்துழைப்புடன் தனியார் நிதி நிறுவனத்தின் பிரதான அனுசரனையுடன் குறித்த நிகழ்வு முதலாம் குறுக்குத்தெருவில் இன்று (12.01) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.
முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணிக்கும் பயணிகளுக்கிடையே குறித்த கொவிட் பாதுகாப்பு திரையினை பொருத்தும் வகையில் வழங்கி வைக்கப்பட்டதுடன் இதன் மூலம் கொரோனா தொற்று பரவுவதை குறைந்த பட்சம் தடுக்க முடியும் எனவும் அனுசரனையாளர்கள் தெரிவித்திருந்தனர்.